கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது - முதல்-மந்திரி பினராயி விஜயன்


கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது - முதல்-மந்திரி பினராயி விஜயன்
x

கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்று அம்மாநில முதல்-மந்திரி பினராயி விஜயன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்,

முதல்-மந்திரி பினராயி விஜயன் தலைமையிலான அரசு ஓராண்டு நிறைபெற்றதை கொண்டாடும் விதமாக நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் முதல்-மந்திரி பினராயி விஜயன் கலந்து கொண்டார்.

அந்த நிகழ்ச்சியில் முதல்-மந்திரி பினராயி விஜயன் பேசுகையில்,

இந்திய அரசியலமைப்பில் குறிப்பிட்டுள்ள படி நமது நாடு மதச்சார்பின்மை கொள்கையை கடைபிடித்து வருவதாகவும் ஆனால் தற்போதைய காலக்கட்டத்தில் மதச்சார்பின்மையை அழிக்கும் முயற்சிகள் நடைபெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தை அமல்படுத்துவதற்காக நாட்டின் பல்வேறு பகுதிகளில் மதரீதியாக கணக்கெடுப்பு நடத்தி, மக்களிடையே வகுப்புவாத பதற்றங்கள் உருவாக்கப்பட்டு வருவதாக பினராயி விஜயன் குற்றம் சாட்டினார்.

எனவே கேரளாவில் குடியுரிமை திருத்த சட்டம் அமல்படுத்தப்படாது என்றும் மதத்தின் அடிப்படையில் குடியுரிமை தீர்மானிக்கப்படாது என்ற உறுதியான நிலைப்பாட்டை மாநில அரசு எடுத்துள்ளதாகவும் அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.


Next Story