போதைப்பொருள் கும்பலுக்கு இடையே மோதல் - இருவர் உயிரிழப்பு


போதைப்பொருள் கும்பலுக்கு இடையே மோதல் - இருவர் உயிரிழப்பு
x

கோப்புப்படம் 

கேரளவில் போதைப்பொருள் கும்பலுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் இருவர் உயிரிழந்தனர்.

திருவனந்தபுரம்,

கண்ணூர் தலச்சேரி நெட்டூரை சேர்ந்த ஷபில் என்பவர், போதைப்பொருள் விற்பனை செய்வது தொடர்பாக, ஜாக்சன் என்ற நபரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். அப்போது, ஜாக்சன் தாக்கியதில் காயமடைந்த ஷபில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவத்தை அறிந்த ஷபிலின் தந்தை ஷமீர் மற்றும் உறவினர்களான காலித், ஷானிப் ஆகியோர் ஜாக்சனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். அப்போது ஜாக்சன் மறைத்து வைத்திருந்த கத்தியால் குத்தியதில், காலித் மற்றும் ஷமீர் உயிரிழந்தனர். படுகாயமடைந்த ஷானிப், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார், ஜாக்சன், ஃபர்ஹான், நவீன் ஆகிய மூவரையும் கைது செய்தனர். இதுதொடர்பாக விசாரணை நடத்தியதில், போதைப்பொருள் விற்பனை தொடர்பாக, பணம் கொடுக்கல் வாங்கல் பிரச்சினையில், இருகும்பலுக்கும் இடையே மோதல் ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

1 More update

Next Story