பச்சிளம் குழந்தையை தோளில் சுமந்தபடி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் ...!


பச்சிளம் குழந்தையை தோளில் சுமந்தபடி சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர் ...!
x

ஒடிசாவில் பச்சிளம் குழந்தையை தோளில் சுமந்தபடி தூய்மை பணியாளர் சுத்தம் செய்யும் பணி செய்தார்.

ஒடிசா,

ஒடிசா மாநிலம் பரிபடா பகுதியில் வசித்து வருவபர் லக்‌ஷ்மி முகி. இவர் தூய்மை பணியாளர் பணி செய்து வருகிறார். இவருக்கு பச்சிளம் குழந்தை ஒன்று உள்ளது.

இந்த நிலையில், மயூர்பஞ்ச் பகுதியில் லக்‌ஷ்மி முகி தூய்மை பணியின் போது தனது பச்சிளம் குழந்தையை ஒரு துணியால் கட்டி தனது தோளுக்கு பின்னால் போட்டு சுமந்தபடியே சுத்தம் செய்யும் பணியை மேற்கொண்டார். இந்த செயலைக் கண்ட அப்பகுதி மக்கள் அவரை வெகுவாக பாராட்டினர். மேலும் குழந்தையை சுமந்தபடி தூய்மை பணியை செய்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இது குறித்து தூய்மை பணியாளர் லக்‌ஷ்மி முகியி கூறுகையில், வீட்டில் யாரும் இல்லாததால் தானே குழந்தையை பார்த்துக்கொள்ள வேண்டியுள்ளதாக தெரிவித்துள்ளார்.


Next Story