உத்தரகாண்டில் மேகவெடிப்பு: நிலச்சரிவு பலி எண்ணிக்கை 11 ஆக உயர்வு
உத்தரகாண்டில் நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்துள்ளது.
டேராடூன்,
உத்தரகாண்டில் கடந்த வாரத்தில் மேகவெடிப்பு ஏற்பட்டு கனமழை கொட்டியது. இதனால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு கட்டிட இடிபாடுகளுக்குள் பலர் புதையுண்டனர்.
நிலச்சரிவு ஏற்பட்ட மறுநாளில் 4 பேரின் சடலங்கள் மீட்கப்பட்டு இருந்தன. சுமார் 10-க்கும் மேற்பட்டவர்கள் மாயமாகி இருந்தனர். அடுத்தடுத்த நாட்களிலும் சிலரின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.
இந்தநிலையில் நேற்று முன்தினம் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதையடுத்து இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆக உயர்ந்தது. பைஸ்வார் என்ற இடத்தில் இந்த உடல்கள் கண்டுபிடிக்கப்பட்டன. டேராடூன் மற்றும் டெக்ரி மாவட்டங்களில் தலா 4 பேரை இதுவரை காணவில்லை. அவர்களை மீட்கும்பணி தொடர்ந்து நடைபெறுகிறது.
Related Tags :
Next Story