முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோசுக்கு இன்று சுற்றுப்பயணம்


முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை  தாவோசுக்கு இன்று  சுற்றுப்பயணம்
x

உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தாவோசுக்கு இன்று சுற்றுப்பயணம் செல்கிறார்

பெங்களூரு: பெங்களூருவில் நேற்று முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- சுவிட்சர்லாந்து நாட்டில் உள்ள தாவோசில் உலக பொருளாதார மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். இதற்காக நாளை (அதாவது இன்று) காலை 10 மணிக்கு பெங்களூருவில் இருந்து துபாய் புறப்பட்டு செல்கிறேன். அங்கிருந்து தாவோஸ் செல்ல உள்ளேன். தாவோசில் 3 நாட்கள் தங்க உள்ளேன்.


வருகிற 26-ந் தேதி காலை 10 மணிக்கு பெங்களூருவுக்கு திரும்ப இருக்கிறேன். தாவோஸ் மாநாட்டில் 2 நிகழ்ச்சிகளில் பங்கேற்க எனக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. அந்த நிகழ்ச்சிகளில் பங்கேற்று பேச உள்ளேன். அதன்பிறகு, தொழில் முதலிட்டாளர்களை சந்தித்து கர்நாடகத்தில் முதலீடு செய்யும்படி அழைப்பு விடுக்க உள்ளேன். இதன்மூலம் மாநிலத்திற்கு அதிக முதலீடு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story