மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரரை மசாஜ் செய்யவைத்த பயிற்சியாளர் - அதிர்ச்சி வீடியோ...!
மைதானத்தில் இளம் கிரிக்கெட் வீரர் பயிற்சியாளருக்கு மசாஜ் செய்யும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
லக்னோ,
உத்தரபிரதேச மாநிலம் டியொரியா மாவட்ட கிரிக்கெட் சங்கத்தில் பயிற்சியாளராக செயல்பட்டு வந்தவர் அப்துல் அஹத். இவர் ரவீந்திர கிஷோர் ஷாகி கிரிக்கெட் மைதானத்தில் வைத்து இளம் வீரர்களுக்கு கிரிக்கெட் பயிற்சி வழங்கி வந்தார்.
இந்நிலையில், பயிற்சியாளர் அப்துல் அஹத்திற்கு இளம் வீரர் மசாஜ் செய்துவிடும் வீடியோ நேற்று முன் தினம் சமூகவலைதளத்தில் வைரலானது. மைதானத்திற்குள் உள்ள அறையில் பயிற்சியாளர் அப்துல் மேசையில் படுத்திருக்க அவருக்கு இளம் வீரர் மசாஜ் செய்யும் வீடியோ வெளியானது.
இந்த வீடியோ வைரலான நிலையில் இளம் வீரரை கட்டாயப்படுத்தி மசாஜ் செய்ய வைத்த பயிற்சியாளர் அப்துலை பணியில் இருந்து நீக்கி மாநில விளையாட்டுத்துறை இயக்குனர் அதிரடி உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story