காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் மோடி வாழ்த்து


காமன்வெல்த்: பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் மோடி வாழ்த்து
x

காமன்வெல்த்தின் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி,

72 நாடுகள் பங்கேற்றுள்ள 22-வது காமன்வெல்த் விளையாட்டு போட்டி இங்கிலாந்தின் பர்மிங்காம் நகரில் கோலாகலமாக நடைபெற்று வருகிறது.

இந்த சூழலில் ஆண்களுக்கான பளுதூக்குதலின் (96 கிலோ) இறுதி போட்டி இன்று நடைபெற்றது. அதில் இந்தியாவின் விகாஸ் தாக்கூர், இப்போட்டியில் மொத்தம் 346 கிலோ தூக்கி 2வது இடம் பிடித்து வெள்ளிப்பதக்கத்தை வென்று அசத்தினார்.

இந்நிலையில் காமன்வெல்த்தின் பளு தூக்கும் போட்டியில் வெள்ளி வென்ற விகாஸ் தாக்கூருக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது டுவிட்டரில், "பளு தூக்குதலில் வெள்ளிப் பதக்கம் வென்ற விகாஸ் தாக்கூர் இம்முறை காமன்வெல்த் போட்டியில் அதிகப் புகழ் பெற்றுள்ளார். அவர் பெற்ற வெற்றியில் மகிழ்ச்சியடைகிறேன். விளையாட்டில் அவர் காட்டும் அர்ப்பணிப்பு பாராட்டுக்குரியது. வரவிருக்கும் முயற்சிகளுக்கு அவர் சிறந்து விளங்க வாழ்த்துகிறேன்" என்று அதில் பிரதமர் மோடி பதிவிட்டுள்ளார்.

இதன் மூலம் காமன்வெல்த் போட்டியில் இந்தியாவின் பதக்க எண்ணிக்கை 12-ஆக உயர்ந்துள்ளது. இந்தியா இதுவரை 5 தங்கம், 4 வெள்ளி, 3 வெண்கலம் என 12 பதக்கங்களை வென்று 6-வது இடத்தில் நீடிக்கிறது.


Next Story