"குஜராத்தில் விரைவில் பூரண மதுவிலக்கு நீக்கம்" முன்னாள் முதல் மந்திரி பரபரப்பு கருத்து
வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதியிலும் போட்டியிடப்போவதாக குஜராத் முன்னாள் முதல் மந்திரி சங்கர்சின் வகேலா கூறியுள்ளார்.
அகமதாபாத்,
குஜராத்தில் தனது கட்சி ஆட்சிக்கு வந்தால் பூரண மதுவிலக்கு நீக்கி, வருவாய் பெருக்கப்படும் என முன்னாள் முதல் மந்திரி சங்கர்சின் வகேலா உறுதியளித்துள்ளார்.
குஜராத்தில் ஆட்சி நடக்கவில்லை, ஊழல் மட்டுமே நடப்பதாக தெரிவித்த சங்கர்சின் வகேலா, பாஜக, காங்கிரஸ், ஆம் ஆத்மி ஆகிய கட்சிகளின் முதலாளிகள் ஒருவரே என குற்றம் சாட்டினார்.
புதிதாக கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும், வரும் சட்டப்பேரவைத் தேர்தலில் 182 தொகுதியிலும் போட்டியிடப்போவதாகவும் கூறினார். தனது கட்சி ஆட்சிக்கு வந்தால், 12 லட்சம் ரூபாய் வரை மருத்துவக் காப்பீடு வழங்கப்படும், குடிநீர் வரி தள்ளுபடி செய்யப்படும், 100 யூனிட் இலவச மின்சாரம், பூரண மதுவிலக்கு கொள்கை நீக்கப்படும் என வாக்குறுதி அளித்தார்.
பூரண மதுவிலக்கு நீக்கப்படுவதால் சாராயம் குடித்து உயிரிழப்பு ஏற்படுவதை தடுக்க முடியும் என்றும், அதனால் அதிகப்படியான வருவாய் பெறுக்க முடியும் என்றும் கூறியுள்ளார். அந்த வருவாயை பயன்படுத்தி உயர்கல்வி வரை இலவசமாக வழங்கப்படும் என்றும் சங்கர்சின் வகேலா தெரிவித்துள்ளார்.