5 மாநிலங்களுக்கான தேர்தல் பார்வையாளர்களை நியமனம் செய்தது காங்கிரஸ்
5 மாநில சட்டசபை தேர்தலை முன்னிட்டு தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் கட்சி நியமனம் செய்துள்ளது.
புதுடெல்லி,
அடுத்த ஆண்டு ஏப்ரல், மே மாதங்களில் நாடாளுமன்றத் தேர்தல் பல கட்டங்களாக நடத்தப்பட உள்ளது. நாடாளுமன்ற தேர்தலுக்கு முன்பாக நடப்பாண்டு இறுதியில் சத்தீஷ்கர், மத்தியப் பிரதேசம், மிசோரம், ராஜஸ்தான், தெலுங்கானா என 5 மாநில சட்டமன்ற தேர்தல் வரவுள்ளது. இந்த தேர்தல் நாடளுமன்ற பொதுத்தேர்தலுக்கான முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.
இந்த சூழலில் மத்தியில் ஆளும் பாஜகவை வீழ்த்த காங்கிரஸ், திமுக உள்பட 26 எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன.
இந்நிலையில் நடப்பு ஆண்டு இறுதியில் சட்டசபை தேர்தல் நடைபெறும் 5 மாநிலங்களுக்கு தேர்தல் பார்வையாளர்களை காங்கிரஸ் நியமித்துள்ளது.
இதன்படி ராஜஸ்தான் மாநில சட்டசபை தேர்தல் பார்வையாளர்களாக மதுசூதன் மிஸ்திரி, சசிகாந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மத்திய பிரதேச சட்டசபை தேர்தல் பார்வையாளராக ரன்தீப் சிங் சுர்ஜேவாலா, சந்திரகாந்த் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சத்தீஷ்கர் மாநில சட்டசபை தேர்தல் பார்வையாளராக பிரீதம் சிங், மீனாட்சி நடராஜன் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
தெலுங்கான சட்டசபை தேர்தல் பார்வையாளராக தீபா தாஸ்முன்ஷி, ஸ்ரீவல்லா பிரசாத் ஆகியோர் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
மிசோரம் சட்டசபை தேர்தல் பார்வையாளராக சச்சின் ராவ் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.