காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி என்பது கேள்விக்குறியே - பிரதமர் மோடி
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரசால் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது என பிரதமர் மோடி கூறினார்.
சிம்லா,
இமாசல பிரதேச சட்டசபை தேர்தல் வருகிற 12-ந்தேதி தொடங்குகிறது. இதனை முன்னிட்டு தேர்தல் பிரசாரம் சூடு பிடித்து உள்ளது. ஆளும் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றன. இந்தநிலையில், இமாச்சல பிரதேசத்தில் உள்ள காங்கராவில் நடைபெற்ற பாஜக பிரச்சாரக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது அவர் கூறியதாவது,
இமாச்சல பிரதேசத்தில் நிலையான மற்றும் வலிமையான அரசு உள்ளது. இமாச்சல பிரதேசத்தில், இரடடை என்ஜீன் சக்தி மற்றும் வலிமையான அரசு சாதனைகளை படைக்கும். அமைந்தால், மாநிலம், அனைத்து சவால்களில் இருந்தும் மீண்டு வருவதுடன் பல சாதனைகளை படைக்கும்
இந்த முறை உத்தரகாண்ட் மக்களும் பழைய வழக்கத்தை மாற்றி பாஜகவை வெற்றி பெறச் செய்துள்ளனர். உ.பி.யிலும், 40 ஆண்டுகளுக்குப் பிறகு ஒரு கட்சி மீண்டும் வெற்றி பெற்று அறுதிப் பெரும்பான்மையுடன் தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்துள்ளது. மணிப்பூரில் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்துள்ளது.
இமாச்சலப் பிரதேசத்தில் காங்கிரஸ் நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. காங்கிரஸ் ஆளும் மாநிலங்களில் வளர்ச்சி என்பது கேள்விக்குறி. காங்கிரஸ் என்றால் ஊழல், காங்கிரஸ் ஆட்சியில் ஊழலுக்கு உத்தரவாதம். காங்கிரசால் இமாச்சல பிரதேசத்தில் ஒரு நிலையான ஆட்சியைக் கொடுக்க முடியாது. அவர்களும் விரும்பவில்லை, காங்கிரஸ்க்கு ராஜஸ்தான் & சத்தீஸ்கார் ஆகிய இரண்டு மாநிலங்கள் மட்டுமே உள்ளன, இந்த இரண்டு மாநிலங்களிலிருந்தும் வளர்ச்சி பற்றிய செய்திகள் எதுவும் வரவில்லை. பிளவுபட்ட காங்கிரசால் மக்களுக்கு எந்த பலனும் இல்லை. மாறாக உட்கட்சி பூசல் குறித்த செய்திகள் மட்டுமே வருகின்றன.
எதிர்காலம் 5ஜிக்கு சொந்தமானது. இமாச்சல பிரதேசத்தின் இளைஞர்களும், ஹிமாச்சலி மக்களின் வாழ்க்கையும் 5ஜி மூலம் மாற்றப்படும். இதன் மூலம் தொலைதூரப் பள்ளிகளின் கல்வியும் நகரங்களைப் போல் மாறும் என்றார்.