ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை கையும், களவுமாக பிடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.


ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை கையும், களவுமாக பிடித்த காங்கிரஸ் எம்.எல்.ஏ.
x

பல்லாரியில் ரேஷன் அரிசி கடத்தல் கும்பலை காங்கிரஸ் எம்.எல்.ஏ. கையும், களவுமாக பிடித்தார்.

பல்லாரி:

பல்லாரி மாவட்டம் காம்பளியில் கர்நாடக அரசின் அன்னபாக்ய திட்டத்தின் கீழ் ரேஷன் கார்டுதாரர்களுக்கு வழங்கப்படும் அரிசியை பதுக்கி வெளிமாநிலங்களுக்கு கடத்தி செல்வதாக பொதுமக்கள் குற்றம்சாட்டி வந்தனர். குறிப்பாக அப்பகுதியில் உள்ள ஒரு கோழிப்பண்ணையில் இருந்து இந்த அரிசி கடத்தல் சம்பவம் நடந்து வருவதாகவும் புகார் எழுந்தது. இந்த நிலையில் காம்பளி தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ.வான ஜே.என்.கணேஷ் இன்று குறிப்பிட்ட கோழிப்பண்ணையில் தனது ஆதரவாளர்களுடன் சென்று சோதனையிட்டார். சோதனையில் அங்கு நூற்றுக்கணக்கான அரிசி மூட்டைகள் இருந்தன. அவற்றை அவர் ஆய்வு செய்தார். அப்போது அது அன்னபாக்ய திட்ட அரிசி என்பது தெரியவந்தது.

இதையடுத்து 100-க்கும் மேற்பட்ட அரிசி மூட்டைகளை அவர் பறிமுதல் செய்து, உணவு வழங்கல் துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். மேலும் இந்த ரேஷன் அரிசி கடத்தல் தொடர்பாக 4 பேரை பிடித்து உணவு வழங்கல் துறையினர் விசாரித்தனர். ஆனால் அவர்களுக்கு கன்னடம் தெரியவில்லை. அவர்கள் வெளிமாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. இதுகுறித்து காம்பளி போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களை பிடித்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story