நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது - காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி
நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச் சொல்லவில்லை, பிரதமர் வர வேண்டும் என்றே கூறினோம் என காங்கிரஸ் எம்.பி. ஆதிர் ரஞ்சன் சவுத்ரி கூறினார்.
புதுடெல்லி,
மக்களவையில் நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று காலை பேசியதையடுத்து, காங்கிரஸ் மக்களவைக் குழுத் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி பேசினார். அப்போது,
பிரதமர் மோடியின் மவுனத்தைக்கலைக்கவே நம்பிக்கையில்லா தீர்மானத்தைக்கொண்டு வந்தோம். இந்திய நாட்டு மக்கள் நலன் மீது மட்டுமே கவனம் செலுத்தி வருகிறோம்.
நம்பிக்கையில்லா தீர்மானம் இன்று பிரதமரை நாடாளுமன்றத்திற்கு கொண்டு வந்து சேர்த்துள்ளது. இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து நாங்கள் யாரும் யோசிக்கவில்லை. பிரதமர் மோடி நாடாளுமன்றத்திற்கு வந்து மணிப்பூர் பிரச்சினை குறித்து பேச வேண்டும் என்று தான் நாங்கள் கோரிக்கை விடுத்தோம். நாங்கள் எந்த பாஜக உறுப்பினரையும் அவைக்கு வரச்சொல்லவில்லை. பிரதமர் மோடி வரவேண்டும் என்றே கூறினோம் என்றார்.
Related Tags :
Next Story