'ஆட்சியை பிடிக்கவோ பிரதமர் பதவிக்கோ' காங்கிரஸ் விரும்பவில்லை - மல்லிகார்ஜூன கார்கே
ஆட்சியை பிடிக்கவோ... பிரதமர் பதவிக்கோ காங்கிரஸ் விரும்பவில்லை என்று மல்லிகார்ஜூன கார்கே தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலில் ஆளும் பாஜகவை வீழ்த்தும் நோக்கத்தில் காங்கிரஸ் உள்பட எதிர்க்கட்சிகள் ஓரணியில் திரண்டுள்ளன. கடந்த மாதம் (ஜூன்) 23-ந்தேதி பாட்னாவில் எதிர்க்கட்சிகளின் முதல் கூட்டம் நடைபெற்ற நிலையில் தற்போது 2வது கூட்டம் பெங்களூருவில் நடைபெற்று வருகிறது.
காங்கிரஸ், திமுக, திரிணாமுல் காங்கிரஸ், சிவசேனா (உத்தவ் தாக்கரே அணி) உள்பட 26 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்றுள்ளன.
பெங்களூருவில் நடைபெற்று வரும் இந்த கூட்டத்தில் பேசிய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, ஆட்சியை பிடிக்கவோ... பிரதமர் பதவிக்கு வரவோ காங்கிரஸ் விரும்பவில்லை. இந்த கூட்டத்தின் மூலம் அதிகாரத்தை பெற்றுக்கொள்வது எங்கள் நோக்கமல்ல. நாட்டின் அரசியலமைப்பு, ஜனநாயகம், மதச்சார்பின்மை, சமூக நீதியை பாதுகாப்பதே எங்கள் நோக்கம்' என்றார்.
Related Tags :
Next Story