முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு


முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு
x

முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு மறுஆய்வு கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரஸ் மனு தாக்கல் செய்துள்ளது.

புதுடெல்லி,

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு தொடர்பான ரிட் மனுக்களை சுப்ரீம் கோர்ட்டு தலைமை நீதிபதி யு.யு.லலித் தலைமையிலான அரசியல்சாசன அமர்வு விசாரித்தது. கடந்த செப்டம்பர் மாதம் 7 நாள்களாக விசாரித்த அந்த அமர்வு, கடந்த 7-ந்தேதி தீர்ப்பு கூறியது. நீதிபதி தினேஷ் மகேஸ்வரி கூறிய தீர்ப்பில், இ்ந்த இடஒதுக்கீடு அரசியலமைப்பு சாசனத்தின் அடிப்படைக்கூறுகளை மீறவில்லை என்று தெரிவித்தார்.

நீதிபதி பேலா எம்.திரிவேதி கூறிய தீர்ப்பில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்றார். நீதிபதி ஜே.பி.பார்திவாலா தனது தீர்ப்பில், இந்த இடஒதுக்கீடு செல்லும். ஆனால் முடிவில்லா காலத்துக்கு இடஒதுக்கீடு தொடரக்கூடாது என்று தெரிவித்தார்.

நீதிபதி ரவீந்திர பட் தனது தீர்ப்பில், இந்த 10 சதவீத இடஒதுக்கீட்டில் தாழ்த்தப்பட்ட, பழங்குடியினரை தவிர்த்திருப்பது அரசமைப்பு சாசனத்தை மீறுவதாக கூறினார். இந்த தீர்ப்புடன் தான் ஒத்துப்போவதாக தலைமை நீதிபதி யு.யு.லலித் தெரிவித்தார்.

இந்த நிலையில், பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10 சதவீத இடஒதுக்கீடு செல்லும் என்ற தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி சுப்ரீம் கோர்ட்டில் காங்கிரசை சேர்ந்த ஜெயா தாக்குர் மனு தாக்கல் செய்துள்ளார்.


Next Story