குஜராத் சட்டமன்ற தேர்தல்: காங்கிரஸ் கட்சியின் 2-வது கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு
குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
அகமதாபாத்,
குஜராத்தில் அடுத்த மாதம் நடைபெற உள்ள குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான இரண்டாவது பட்டியலை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.
182 உறுப்பினர் கொண்ட குஜராத் மாநில சட்டப்பேரவைக்கு வரும் டிசம்பர் 1 மற்றும் 5 என இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளது. தேர்தல் அறிவிப்பை அடுத்து அங்கு அரசியல் கட்சிகள் தங்களது தீவிர பிரசாரத்தைத் தொடங்கியுள்ளன.
குஜராத் சட்டப்பேரவைக்கு தகுதி வாய்ந்த வேட்பாளர்களை தேர்வு செய்யும் பணி கடந்த சில நாள்களாக நடைபெற்று வந்த நிலையில், 43 பேர் அடங்கிய முதல் வேட்பாளர் பட்டியல் காங்கிரஸ் ஏற்கனவே வெளியிட்டது. இந்நிலையில், குஜராத் சட்டப்பேரவை தேர்தலுக்கான 46 வேட்பாளர்கள் அடங்கிய இரண்டாவது பட்டியலை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story