குஜராத்: பாஜனதா அரசுக்கு எதிராக குற்றப் பத்திரிகை தாக்கல் செய்த காங்கிரஸ்
குஜராத் சட்டசபை தேர்தலுக்கு முன்னதாக பாஜனதா அரசுக்கு எதிராக 22 அம்ச குற்றப்பத்திரிகையை காங்கிரஸ் வெளியிட்டது
ஆமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் உள்ள 182 சட்டசபை தொகுதிகளுக்கும் இரண்டு கட்டங்களாக அடுத்த மாதம் தேர்தல் நடத்தப்பட உள்ளது.
இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் ஆட்சியில் உள்ள பாஜனதா அரசுக்கு எதிராக காங்கிரஸ் 22 அம்ச குற்றப் பத்திரிகையைத் தாக்கல் செய்துள்ளது. அதில், மக்களுக்கு எதிராக பாஜனதா செய்துள்ள குற்றங்களை காங்கிரஸ் பட்டியலிட்டுள்ளது. மேலும் குஜராத் மக்கள் பசி மற்றும் பயத்தில் இருப்பதாகவும் அண்மையில் நடைபெற்ற மோர்பி தொங்கு பால விபத்து குறித்தும், பில்கிஸ் பனோ கூட்டுப் பாலியல் வழக்கில் கைது செய்யப்பட்ட 11 குற்றவாளிகளை விடுதலை செய்தது குறித்தும் அந்த குற்றப் பத்திரிகையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story