பள்ளி பாடங்கள் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்; பெங்களூருவில் நடந்தது


பள்ளி பாடங்கள் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம்;  பெங்களூருவில் நடந்தது
x

பெங்களூருவில்,பள்ளி பாடங்கள் நீக்கத்தை கண்டித்து காங்கிரஸ் போராட்டம் நடத்தியது.

பெங்களூரு: கர்நாடக அரசு பள்ளி பாடங்களில் இருந்து பகத்சிங், நாராயணகுரு, குவெம்பு உள்ளிட்ட முக்கிய தலைவர்களின் பாடங்களை நீக்கியதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் பெங்களூரு விதான சவுதாவில் உள்ள மகாத்மா காந்தி சிலை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டம் நடத்தினர். அக்கட்சியின் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா உள்பட முன்னணி நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதில் டி.கே.சிவக்குமார் பேசியதாவது:-

பா.ஜனதா அரசு பள்ளி பாடத்திட்டத்தில் முக்கிய தலைவர்களின் பாடங்களை நீக்கியுள்ளது. இதன் மூலம் அந்த தலைவர்களுக்கு அவமானம் இழைத்துள்ளது. மாநிலத்தில் அமைதியற்ற சூழல் நிலவுகிறது. அம்பேத்கர் அரசியல் சாசனத்தை உருவாக்கி கொடுத்தார். அவரை அவமதிப்பது சரியா?. அதிக ஞானபீட விருதுகள் பெற்ற தேசியகவி குவெம்புவையும் அவமதித்துள்ளனர். தேசிய கல்வி கொள்கையை கொண்டு வந்து கர்நாடகத்தின் கலாசாரத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள். திருத்திய பாடங்களை நீக்கிவிட்டு பழைய பாடங்களையே தொடர்ந்து கற்பிக்க வேண்டும். கர்நாடக அரசு தனது முடிவை மாற்றிக்கொள்ள வேண்டும். இல்லை என்றால் மக்கள் போராடி முடிவை மாற்ற வைப்பார்கள். வரும் நாட்களில் இத்தகைய போராட்டம் மாவட்ட, தாலுகா அளவில் நடத்தப்படும் என்றார்.


Next Story