எர்ணாகுளத்தை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற காங். எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசு எதிர்ப்பு

எர்ணாகுளத்தை தலைநகராக மாற்ற வேண்டும் என்ற காங். எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசு எதிர்ப்பு
x

கேரளாவின் தலைநகராக எர்ணாகுளத்தை மாற்ற வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

திருவனந்தபுரம்,

கேரளாவின் தலைநகராக எர்ணாகுளத்தை மாற்ற வேண்டும் என்ற காங்கிரஸ் எம்.பி.யின் தனிநபர் மசோதாவிற்கு கேரள அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

கேரள தலைநகரை திருவனந்தபுரத்தில் இருந்து எர்ணாகுளத்திற்கு மாற்ற வேண்டும் என காங்கிரஸ் எம்.பி. ஹைபி ஈடன் கடந்த நாடாளுமன்ற கூட்டத்தில் தனிநபர் மசோதாவை தாக்கல் செய்திருந்தார். இது தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் அனுப்பிய கடிதத்திற்கு எதிர்ப்பு தெரிவித்த கேரள அரசு, தலைநகரை மாற்ற வேண்டிய அவசியமில்லை எனவும், இது நடைமுறையில் சாத்தியமற்றது எனவும் பதில் அளித்தது.

இந்த நிலையில், ஹைபி ஈடன் தாக்கல் செய்த தனிநபர் மசோதா உள்நோக்கம் கொண்டது என விமர்சித்துள்ள கேரள மந்திரி சிவன்குட்டி, அவரது மசோதா மாநிலத்தை பெரும் நிதி நெருக்கடியில் தள்ளும் நடவடிக்கை எனவும், இந்த விவகாரத்தில் அரசு தெளிவான பார்வை கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

Next Story