சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு


சட்டசபை தேர்தலில் காங்கிரஸ்  தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் மல்லிகார்ஜுன கார்கே பேச்சு
x
தினத்தந்தி 24 April 2023 6:45 PM GMT (Updated: 24 April 2023 6:46 PM GMT)

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

சிக்கமகளூரு-

சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்று மல்லிகார்ஜுன கார்கே கூறினார்.

காங்கிரஸ் பிரசாரம்

கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் வருகிற 10-ந் தேதி நடைபெறுகிறது. இந்தநிலையில் ஆளும் பா.ஜனதா, காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) ஆகிய கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்தநிலையில் சிக்கமகளூருவுக்கு அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தனி ெஹலிகாப்டர் மூலம் வந்தார். பேலூர் ரோட்டில் உள்ள ஆச்சார்யா மைதானத்தில் காங்கிரஸ் சார்பில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் கலந்து கொண்டார். அப்போது வேட்பாளர்களை ஆதரித்து மல்லிகார்ஜுன கார்கே பேசியதாவது:-

நான் காங்கிரசின் தலைவராக பொறுப்பேற்ற பின் முதல் முறையாக சிக்கமகளூருவுக்கு வருகிறேன். இதற்கு முன்பு எனக்கும், சிக்கமகளுருவுக்கும் பல்வேறு உறவுகள் உள்ளன.உதாரணத்திற்கு முன்னாள் பிரதமர் இந்திரா காந்திக்கு மறுவாழ்வு கொடுத்த ஊர் சிக்கமகளூரு ஆகும். நான் ரெயில்வே மந்திரியாக இருந்த போது சிக்கமகளூரு- கடூர் ரெயில் சேவையை கொண்டு வந்தேன். இதனை தேவேகவுடா தொடங்கி வைத்தார்.

ரெயில் பாதைகள்

இந்தியாவில் பல இடங்களில் காங்கிரஸ் ஆட்சியில் ெரயில் பாதைகள் அமைக்கப்பட்டுள்ளது. அதே ரெயில் பாதையில் பா.ஜனதா கட்சியினர் புதிய ெரயில் விட்டு பெருமை தேடி வருகின்றனர். புதிதாக எந்த ஒரு நலத்திட்டங்களையும் பிரதமர் நரேந்திர மோடி செய்யவில்லை. ஆனால் எதையும் செய்யாமலேயே தான் செய்ததாக பெருமை தேடிக் கொள்கிறார். சுற்றுலா பகுதியான சிக்கமளூரு மாவட்டத்தை மாற்றி அமைப்பதற்கு யாரும் முன் வரவில்லை. இந்த தொகுதியைச் சேர்ந்த எம்.எல்.ஏ. ஜாதி, மதம் என்ற பெயரில் அனைவரையும் திசை திருப்பி தொடர்ச்சியாக அவர் எம்.எல்.ஏ.வாக இருந்து வருகிறார்.

வருகிற சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் கட்சி 150 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கும். பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சி 70 ஆண்டுகளாக என்ன செய்தது என கேட்கிறார். 1947-ம் ஆண்டு படிப்பின் சதவீதம் 16 சதவீதமாக இருந்ததை 2013 வரை 74 சதவீதம் கொண்டு வந்்தது காங்கிரஸ். இந்தியாவில் 1 லட்சத்து 40 ஆயிரம் பள்ளிகள் இருந்த நிலையில் 14 லட்சம் பள்ளிகளை கொண்டு வந்துள்ளோம்.

பலத்த போலீஸ் பாதுகாப்பு

காங்கிரஸ் ஆட்சியில் தான் பெண்களுடைய கல்வி உயர்த்தப்பட்டுள்ளது. எதிர்வரும் சட்டசபை தேர்தலில் மாநிலத்தில் மாற்றம் அமைந்து இந்த முறை வேட்பாளர்கள் ஆகிய சிக்கமகளூரு- தம்மய்யா, மூடிகெரே-நயனா மோட்டம்மா, சிருங்கேரி-ராஜேகவுடா ஆகியோரை நீங்கள் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

பிரசாரத்தையொட்டி மைதானத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு மல்லிகார்ஜுன கார்கே தரிகெரேவுக்கு ஹெலிகாப்டரில் சென்றார்.


Next Story