3 மணி நேரம் கண்ணை மூடினால் ரூ. 7 லட்சம் ரூ. 7 கோடியாக மாறும் - பணத்தை சுருட்டிய கில்லாடி கும்பல்


3 மணி நேரம் கண்ணை மூடினால் ரூ. 7 லட்சம் ரூ. 7 கோடியாக மாறும் - பணத்தை சுருட்டிய கில்லாடி கும்பல்
x

ரூ.7 கோடியாக மாற்றுவோம் என கண்ணை மூடுமாறு கூறி ரூ.7 லட்சத்தை திருடி சென்ற இருவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மும்பை,

மராட்டிய மாநிலம் நாக்பூர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் அரிஃபுதின் குவாசி (49). இவருடைய நண்பர், தனக்கு 1 லட்ச ரூபாயை பூஜை செய்து 1 கோடி ரூபாயாக மாற்றும் 2 மந்திரவாதிகளை தெரியும் என கூறியுள்ளார்.

இதை நம்பிய குவாசி, அந்த 2 பேரையும் கடந்த வியாழக்கிழமை தனது அலுவலகத்திற்கு அழைத்துள்ளார். அப்போது, தன்னிடம் இருந்த 7 லட்ச ரூபாயை அந்த கும்பலிடம் கொடுத்துள்ளார். அவர்கள் பணத்தின் முன் சில பூஜைகள் செய்ய வேண்டும், பூஜை சுமார் 3 மணி நேரம் அதுவரை கண்களை மூடிக்கொள்ள வேண்டும் திறக்கக்கூடாது அப்போது தான் 7 லட்ச ரூபாய் 7 கோடி ரூபாயாக மாறும் என குவாசியிடம் கூறியுள்ளனர்.

இதை நம்பிய குவாசி, கண்களை மூடியுள்ளார். அப்போது, பூஜை நடத்த வந்த 2 பேரும் அங்கு வைக்கப்பட்டிருந்த 7 லட்ச ரூபாயையும் எடுத்துக்கொண்டு அங்கிருந்து ஓட்டம் பிடித்தனர்.

3 மணி நேரத்திற்கு பின் கண்களை திறந்து பார்த்தபோது தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த குவாசி இது குறித்து போலீசில் புகார் அளித்தார். புகாரை தொடர்ந்து வழக்குப்பதிவு செய்த போலீசார் பணத்தை சுருட்டிக்கொண்டு தப்பிச்சென்ற 2 பேரையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.


Next Story