திட்டமிட்ட காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்படும் அயோத்தி ராமர் கோவில்...!


திட்டமிட்ட காலத்திற்கு முன்பே கட்டி முடிக்கப்படும் அயோத்தி ராமர் கோவில்...!
x

அயோத்தியில் இந்து மத வழிபாட்டு தலமான ராமர் கோவில் கட்டும்பணிகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் இந்து மத வழிபாட்டு தலமான ராமர் கோவில் கட்டும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணி கடந்த 2020-ம் ஆகஸ்ட் மாதம் தொடங்கியது. பிரதமர் மோடி அடிக்கல் நாட்டி கோவில் கட்டும்பணிகளை தொடங்கி வைத்தார்.

அதனை தொடர்ந்து கோவில் கட்டுமான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கட்டுமான பணிகளை மேற்பார்வையிட ராம ஜென்ம பூமி அறக்கட்டளை அமைக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, ராமர் கோவிலை இந்த ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் கட்ட திட்டம் தீட்டப்பட்டு பணிகள் நடைபெற்று வந்தது.

இந்நிலையில், திட்டமிட்ட காலத்திற்கு முன்பாகவே ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று ராம ஜென்ம பூமி அறக்கட்டளை தெரிவித்துள்ளது. டிசம்பர் மாதத்திற்கு 3 மாதங்கள் முன்பே வரும் செப்டம்பர் மாதமே ராமர் கோவில் கட்டி முடிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story