உத்தர பிரதேசத்தில் தொடர் கனமழை - 1,300 கிராமங்கள் பாதிப்பு


உத்தர பிரதேசத்தில் தொடர் கனமழை - 1,300 கிராமங்கள் பாதிப்பு
x

மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன.

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பல்வேறு மாவட்டங்களில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இதனால் சாலைகள், குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் தேங்கியது. பல இடங்களில் போக்குவரத்து தடைபட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மாநிலம் முழுவதும் சுமார் 1,300 கிராமங்கள் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 3 பேரும், மின்னல் தாக்கி ஒருவரும், மழைநீரில் வந்த பாம்பு கடித்து ஒருவரும் என 6 பேர் உயிரிழந்துள்ளனர்.

மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களை உடனடியாக மீட்க நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். மேலும் மழை பாதிப்புகளால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண உதவிகளையும் அவர் அறிவித்துள்ளார்.


Next Story