குஜராத்தில் தொடர் கனமழை பள்ளிகளுக்கு இன்று விடுமுறை
குஜராத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால், நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
அகமதாபாத்,
குஜராத் மாநிலத்தில் கடந்த சில நாட்களாக தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. அங்குள்ள நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் பெய்த தொடர்மழையால் பல பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து, மின்சாரம் அகியவை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக அங்குள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பபட்டுள்ளனர். வெள்ளத்தில் சிக்கியுள்ள கிராம மக்களை பத்திரமாக மீட்கும் பணியில் மீட்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். அங்கிருந்து சுமார் 1500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான பகுதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
குஜராத்தில் உள்ள டாங், நவ்சாரி மற்றும் வல்சாத் ஆகிய மாவட்டங்களில் அடுத்த 5 நாட்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதனையடுத்து, நவ்சாரி மற்றும் வல்சாத் மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.