சிக்கமகளூரு-ஹாசன் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம்; சி.டி.ரவி எம்.எல்.ஏ. தகவல்


சிக்கமகளூரு-ஹாசன் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம்;  சி.டி.ரவி எம்.எல்.ஏ. தகவல்
x
தினத்தந்தி 25 Sept 2022 1:00 PM IST (Updated: 25 Sept 2022 1:00 PM IST)
t-max-icont-min-icon

சிக்கமகளூரு-ஹாசன் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக சி.டி.ரவி எம்.எல்.ஏ. தெரிவித்துள்ளார்.

சிக்கமகளூரு;

சிக்கமகளூரு தொகுதி எம்.எல்.ஏ.வும், பா.ஜனதா தேசிய பொதுச்செயலாளருமான சி.டி.ரவி நேற்று நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சிக்கமகளூரு-ஹாசன் சாலை மாநில நெடுஞ்சாலையாக இருந்தது. இதனை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற வேண்டும் என்று மத்திய நெடுஞ்சாலை துறை மந்திரி நிதின் கட்கரியிடம் கோரிக்கை வைக்கப்பட்டது. மேலும் இந்த சாலைக்கான வரைபடமும் அவரிடம் கொடுக்கப்பட்டது.

இந்த சாலையை தேசிய நெடுஞ்சாலையாக மாற்ற அவர் ஒப்புகொண்டுள்ளார். இதனால் சிக்கமகளூரு-ஹாசன் சாலை தேசிய நெடுஞ்சாலை 373 ஆக மாற்றி அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஹாசன் மாவட்டம் ஒலேநரசிப்புராவில் இருந்து சிக்கமகளூரு வழியாக மைசூரு மாவட்டம் கே.ஆர்.நகர் பிளிகெரே வரை மாநில நெடுஞ்சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளது.

மாநில ெநடுஞ்சாலை துறை, பொதுப்பணித்துறையினர் இந்த சாலையை ஒப்படைத்தால் தேசிய நெடுஞ்சாலை துறையினர் சாலை விரிவாக்க பணிகளை தொடங்குவார்கள். சிக்கமகளூரு-ஹாசன் சாலை தேசிய நெடுஞ்சாலையாக மாற்றப்பட்டுள்ளதால் மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இதற்காக பிரதமர் மோடிக்கும், மத்திய மந்திரி நிதின் கட்கரிக்கும் நன்றியை தெரிவித்து கொள்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story