டெல்லியில் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும்; மருத்துவமனை இயக்குநர்


டெல்லியில் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும்; மருத்துவமனை இயக்குநர்
x

டெல்லியில் 2 வாரங்களில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும் என எல்.என்.ஜே.பி. மருத்துவமனை இயக்குநர் தெரிவித்து உள்ளார்.

புதுடெல்லி,

நாடு முழுவதும் சமீப நாட்களாக தினசரி கொரோனா பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. டெல்லியிலும் தொற்று எண்ணிக்கை உயர்ந்து காணப்படுகிறது.

டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்கள் சிலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இதனை தொடர்ந்து, பணியாளர்கள் கடைப்பிடிக்க வேண்டிய அறிவுறுத்தல்களை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் ஆனது வெளியிட்டு உள்ளது.

இந்த நிலையில், டெல்லியில் 7 மாதங்களில் இல்லாத வகையில் நேற்று ஒரே நாளில் 1,149 புதிய கொரோனா பாதிப்புகள் பதிவாகி உள்ளன. இது 23.8 சதவீதம் ஆகும். ஒருவர் உயிரிழந்து உள்ளார் என சுகாதார துறை தெரிவித்து உள்ளது.

இதுபற்றி டெல்லி எல்.என்.ஜே.பி. மருத்துவமனை இயக்குநரான டாக்டர் சுரேஷ் குமார் செய்தியாளர்களிடம் கூறும்போது, முக கவசங்களை மருத்துவமனையில் அணிய வேண்டியது கட்டாயம்.

டெல்லி அரசின் கீழ் 2 ஆயிரம் படுக்கைகளுடன் மிக பெரிய மருத்துவமனையாக உள்ளது. குழந்தைகளுக்கு தடுப்பூசி போடவில்லை. அதனால், முன்னெச்சரிக்கையாக நாம் இருக்க வேண்டும்.

பிறந்து 18 நாட்களே ஆன குழந்தை ஒன்றும் கொரோனா பாதிப்பு சிகிச்சை பெற்று வருகிறது என கூறியுள்ளார். இதுதவிர 4 குழந்தைகளும் சிகிச்சையில் உள்ளனர் என தெரிவித்து உள்ளார்.

மூத்த குடிமக்கள் உள்பட பள்ளிகள் மற்றும் பொது இடங்களில் என அனைவரும் முக கவசங்களை அணிவது சிறந்தது. முன்னெச்சரிக்கை என்பது நிச்சயம் சிறந்த ஒன்று என அவர் கூறியுள்ளார்.

இன்னும் ஒன்றிரண்டு வாரங்களில் டெல்லியில் கொரோனா பாதிப்பு உச்சம் தொடும். அதன்பின்பு, தொற்று எண்ணிக்கை சரியும் என்று கூறியுள்ளார். எனினும், மக்கள் பயப்பட வேண்டாம் என்றும் முறையான கொரோனா தடுப்பு அணுகுமுறைகளை கடைப்பிடிக்கும்படியும், பூஸ்டர் தடுப்பூசிகளை போட்டு கொள்ளும்படியும் கேட்டு கொள்ப்பட்டு உள்ளது.


Next Story