டெல்லியில் இன்று 479 பேருக்கு கொரோனா; 569 பேர் டிஸ்சார்ஜ்


டெல்லியில் இன்று 479 பேருக்கு கொரோனா; 569 பேர் டிஸ்சார்ஜ்
x

டெல்லியில் தற்போது 2,138 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

புதுடெல்லி,

டெல்லி சுகாதாரத்துறை சார்பில் இன்று வெளியிடப்பட்டுள்ள அறிக்கையின்படி, டெல்லியில் இன்று 479 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் டெல்லியில் இதுவரை பதிவு செய்யப்பட்ட மொத்த கொரோனா பாதிப்புகளின் எண்ணிக்கை 19,03,189 ஆக உயர்ந்துள்ளது.

டெல்லியில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனா பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளார். டெல்லியில் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26,200 ஆக உள்ளது. அதே சமயம் டெல்லியில் இன்று 569 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்துள்ளனர். டெல்லியில் தற்போது 2,138 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வருவதாக டெல்லி சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.


Next Story