இந்தியாவில் 56 பேருக்கு கொரோனா
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் புதிதாக 56 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதியானது. இதை தொடர்ந்து, கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 49 லட்சத்து 98 ஆயிரத்து 838 ஆக உயர்ந்தது. நேற்று 59 பேர் கொரோனா தொற்றில் இருந்து மீண்டனர். இதுவரை 4 கோடியே 44 லட்சத்து 66 ஆயிரத்து 366 பேர் கொரோனாவில் இருந்து குணம் அடைந்துள்ளனர்.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் 4 குறைந்தது. 440 பேர் சிகிச்சையில் உள்ளனர். கடந்த சில நாட்களாக கொரோனாவுக்கு உயிரிழப்பு இல்லாமல் இருந்து வந்த சூழலில் நேற்று கொரோனா தொற்றால் ஒருவர் பலியானார். இதனால் மொத்த பலி எண்ணிக்கை 5 லட்சத்து 32 ஆயிரத்து 32 ஆக உயர்ந்தது.
Related Tags :
Next Story