இந்தியாவில் 59 பேருக்கு கொரோனா: ஒருவர் உயிரிழப்பு
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று மேலும் 24 அதிகரித்தது.
புதுடெல்லி,
இந்தியாவில் நேற்று முன்தினம் தினசரி கொரோனா பாதிப்பு 54 ஆக பதிவானது. நேற்று அது சற்று அதிகரித்தது. நேற்று காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் 59 பேருக்கு கொரோனா தொற்று உறுதியானது. நாட்டில் இதுவரை 4 கோடியே 49 லட்சத்து 94 ஆயிரத்து 878 பேருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
நேற்று 34 பேர் தொற்றில் இருந்து மீண்டனர். இதன் மூலம் இதுவரை கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 61 ஆயிரத்து 531 ஆக உயர்ந்துள்ளது.
கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கையில் நேற்று மேலும் 24 அதிகரித்தது. இதனால் நேற்று காலை 8 மணி நிலவரப்படி, 1,432 பேர் சிகிச்சையில் இருந்தனர். நேற்று கொரோனாவுக்கு ஒருவர் உயிரிழந்ததை தொடர்ந்து, மொத்த கொரோனா பலி எண்ணிக்கை 5 லட்சத்து 31 ஆயிரத்து 915 ஆனது.
Related Tags :
Next Story