இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா தொற்று - ஒரே நாளில் 529 பேருக்கு பாதிப்பு உறுதி
நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது.
புதுடெல்லி,
இந்தியாவில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. அத்துடன் ஜே.என்.1 என்ற புதிய வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 529 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
இதனால் நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 4,093 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா பாதிப்பு காரணமாக கடந்த 24 மணி நேரத்தில் கர்நாடக மாநிலத்தைச் சேர்ந்த 2 பேர் மற்றும் குஜராத்தைச் சேர்ந்த ஒருவர் என மொத்தம் 3 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story