இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை சரிவு; 2,961 பேருக்கு பாதிப்பு உறுதி


இந்தியாவில் கொரோனா எண்ணிக்கை சரிவு; 2,961 பேருக்கு பாதிப்பு உறுதி
x

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை, நேற்றுடன் ஒப்பிடும்போது இன்று சரிவடைந்து 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது.

புதுடெல்லி,

இந்தியாவில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை திடீரென உயர்ந்த நிலையில், தற்போது சில நாட்களாக சரிந்து வருகிறது. இதுபற்றி மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பம் நல அமைச்சகம் வெளியிட்டு உள்ள செய்தியில், கடந்த 24 மணிநேரத்தில் 2,961 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது என தெரிவித்து உள்ளது.

இது 3,611 ஆக பதிவான நேற்றைய தினத்துடன் ஒப்பிடும்போது சற்று சரிவடைந்து காணப்படுகிறது. தற்போது 30,041 பேர் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 6,135 பேர் குணமடைந்து உள்ளனர். இதனால் மொத்த குணமடைந்தோர் எண்ணிக்கை 4 கோடியே 44 லட்சத்து 5 ஆயிரத்து 550 ஆக உயர்ந்து உள்ளது. நாட்டில், குணமடைந்தோர் விகிதம் 98.75 சதவீதம் ஆக உள்ளது.

தினசரி பாதிப்பு விகிதம் 2.12 சதவீதம் ஆகவும், வார பாதிப்பு விகிதம் 2.63 சதவீதம் ஆகவும் உள்ளது. இந்தியாவில், 1,39,814 கொரோனா பரிசோதனைகள் நடத்தப்பட்டு உள்ளன. கடந்த 24 மணிநேரத்தில் 1,198 கொரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.

உலக சுகாதார அவசரநிலை என அறிவிக்கப்பட்ட கொரோனா பெருந்தொற்றானது முடிவுக்கு வந்து உள்ளது என்று உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானம் கெப்ரீயேசஸ் சமீபத்தில் அறிவித்து உள்ளார்.


Next Story