உத்தரபிரதேசத்தில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு


உத்தரபிரதேசத்தில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிப்பு
x

உத்தரபிரதேசத்தில் கள்ளத்துப்பாக்கி தொழிற்சாலை கண்டுபிடிக்கப்பட்டது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் மரூலியில் சட்டவிரோதமாக நாட்டு துப்பாக்கிகள் தயாரித்து விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் சோதனையிட்ட போலீசார் அங்கு இயங்கி வந்த நாட்டு துப்பாக்கி தயாரிக்கும் தொழிற்சாலையை கண்டுபிடித்தனர்.

அங்கு வெடிமருந்துகள், குண்டுகள், துப்பாக்கி தயாரிக்க பயன்படும் கருவிகள் ஆகியவற்றை கைப்பற்றினர். இதில் தொடர்புடைய ஒருவரை பிடித்து விசாரித்து வருகின்றனர்.


Next Story