சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நாடு 'பாரதமாக' இருக்கும்; அசாம் முதல்-மந்திரி
சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நாடு ‘பாரதமாக’ இருக்கும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
டெல்லி,
டெல்லியில் வரும் சனிக்கிழமை ஜி20 உச்சி மாநாடு நடைபெற உள்ளது. இந்த மாநாட்டில் ஜி20 நாடுகளின் தலைவர்கள் மட்டுமின்றி சுமார் 40 நாடுகளில் பிரதிநிதிகள் பங்கேற்க உள்ளனர். இவர்களுக்கு வரும் 9-ம் தேதி மாலை ஜனாதிபதி திரவுபதி முர்மு விருந்து அளிக்க உள்ளார். அதற்காக ஜனாதிபதி மாளிகை சார்பில் அழைப்பிதழ் அனுப்பி வைக்கபட்டுள்ளடு. அந்தில் இந்திய ஜனாதிபதி என்று குறிப்பிடுவதற்கு பதில் பாரத ஜனாதிபதி என்று ஆங்கிலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த அழைப்பிதழால் சர்ச்சை வெடித்துள்ளது. நாட்டின் பெயரை 'இந்தியா' என்பதற்கு பதில் 'பாரதம்' என்று மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதாக எதிர்க்கட்சிகள் குற்றஞ்சாட்டி வருகின்றன.
இந்நிலையில், சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நாடு 'பாரதமாக' இருக்கும் என்று அசாம் முதல்-மந்திரி ஹிமந்த பிஸ்வா சர்மா தெரிவித்தார்.
இது தொடர்பாக அவர் கூறுகையில், சூரியனும், சந்திரனும் எவ்வளவு பழமையானதோ அதேபோல் பாரதமும் பழமையானது. சூரியனும், சந்திரனும் இருக்கும் வரை நாடு பாரதமும் இருக்கும். ஒவ்வொரு மாநிலமும், மாநில மக்களும் நாட்டை பாரதம் என்று அழைக்கவே விரும்புகின்றனர்' என்றார்.