திருட்டு வழக்கில் தம்பதி கைது; ரூ.4 லட்சம் நகைகள் மீட்பு


திருட்டு வழக்கில் தம்பதி கைது; ரூ.4 லட்சம் நகைகள் மீட்பு
x

பண்ட்வாலில் திருட்டு வழக்கில் தம்பதி கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடம் இருந்து ரூ.4 லட்சம் நகைகள் மீட்கப்பட்டது.

மங்களூரு;


தட்சிண கன்னடா மாவட்டம் பண்ட்வால் தாலுகா விட்டலா அருகே தம்பேட்டாரு கிராமத்தில் ஒரு வீட்டில் கடந்த 6-ந்தேதி மர்மநபா்கள் புகுந்து பீரோவில் இருந்த தங்கநகைகளை திருடிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து வீட்டின் உரிமையாளர், விட்டலா போலீசில் புகார் அளித்தாா்.

அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடிவந்தனர். இந்த நிலையில் அந்த திருட்டு வழக்கில் தொடர்புடைய தம்பதியை போலீசார் கைது செய்தனர். விசாரணையில், அவர்கள் புத்தூர் தாலுகா பாவிக்கட்டே பகுதியை சேர்ந்த பிரமோத் மற்றும் அவரது மனைவி சுமதி என்ற சுமா (வயது 25) என்பது தெரியவந்தது.

அவர்களிடம் இருந்து 98 கிராம் தங்கநகைகளை போலீசார் மீட்டனர். இதன் மொத்த மதிப்பு 4 லட்சம் இருக்கும். கைதான தம்பதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story