திருட்டு வழக்குகளில் தம்பதி கைது


திருட்டு வழக்குகளில் தம்பதி கைது
x
தினத்தந்தி 5 Dec 2022 12:15 AM IST (Updated: 5 Dec 2022 12:17 AM IST)
t-max-icont-min-icon

திருட்டு வழக்குகளில் தம்பதி கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.5¾ லட்சம் நகைகள், வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

ஞானபாரதி:

பெங்களூரு ஞானபாரதி போலீசார் தங்களுக்கு கிடைத்த தகவல்களின் பேரில் திருட்டு சம்பவங்களில் ஈடுபட்டு வந்த தம்பதியை கைது செய்துள்ளனர். விசாரணையில், அவர்கள் பனசங்கரி 3-வது ஸ்டேஜ், வீரபத்ரா நகரை சேர்ந்த நாகராஜ் (வயது 24), இவரது மனைவி ரம்யா (23) என்று தெரிந்தது. இவர்களில் ரம்யா மைசூருவை சேர்ந்தவர் ஆவார். இவர்கள் 2 பேரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு இருந்தனர். நாகராஜ், ரம்யா கொடுத்த தகவலின் பேரில் 65 கிராம் தங்க நகைகள், 500 கிராம் வெள்ளி பொருட்கள், 2 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

அவற்றின் மதிப்பு ரூ.5¾ லட்சம் ஆகும். தம்பதி கைதாகி இருப்பதன் மூலம் ஞானபாரதி, ராஜராஜேசுவரிநகர், மாதநாயக்கனஹள்ளி ஆகிய போலீஸ் நிலையங்களில் பதிவாகி இருந்த 4 திருட்டு வழக்குகளில் தீர்வு காணப்பட்டுள்ளது. கைதான தம்பதி மீது ஞானபாரதி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.


Next Story