கடன் தொல்லையால் தடுப்பணையில் குதித்து தம்பதி தற்கொலை


கடன் தொல்லையால் தடுப்பணையில் குதித்து தம்பதி தற்கொலை
x

சிக்கமகளூருவில் கடன் தொல்லையால் தடுப்பணையில் குதித்து தம்பதி தற்கொலை செய்து கொண்டனர்.

சிக்கமகளூரு;

தாவணகெரே மாவட்டம் ஹரிஹரா தாலுகா தேவரபிலிகெரே கிராமத்தை சேர்ந்தவர் மட்டத சன்னசாமி (வயது 38). இவரது மனைவி வனஜாசம்மா (33). இவர்கள் கடன் தொல்லையால் அவதிப்பட்டு வந்ததாக தெரிகிறது.

இந்த நிலையில் அவர்கள் 2 பேரும் அந்தப்பகுதியில் தடுப்பணைக்கு சென்றனர். பின்னர் 2 பேரும் தடுப்பணையில் குதித்து தற்கொலை செய்துகொண்டனர். இதுகுறித்து அங்கு சுற்றுலா வந்தவர்கள் ஹரிஹரா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து பார்வையிட்டனர்.


பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையு் தீயணைப்பு படையினர் உதவியுடன் மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து ஹரிஹரா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story