வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன் சாவு


வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன் சாவு
x
தினத்தந்தி 4 Oct 2022 12:15 AM IST (Updated: 4 Oct 2022 12:15 AM IST)
t-max-icont-min-icon

ராய்ச்சூரில் வீடு இடிந்து விழுந்து தம்பதி-மகன் ஆகியோர் உயிரிழந்தனர்.

ராய்ச்சூர்:

ராய்ச்சூர் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக கனமழை பெய்து வருகிறது. மான்வி தாலுகாவில் உள்ள குர்னி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களில் நேற்று முன்தினம் இரவு முழுவதும் மழை விடாமல் கொட்டி தீர்த்தது. இந்த நிலையில் நேற்று காலை குர்னி கிராமத்தில் மழைக்கு ஒரு வீடு இடிந்து விழுந்தது.

இதில் இடிபாடுகளில் சிக்கி அந்த வீட்டில் வசித்து வந்த பரமேஷ், அவரது மனைவி ஜெயம்மா, இந்த தம்பதியின் மகன் பரத் (வயது 5) ஆகியோர் உயிரிழந்தனர். வடகர்நாடகத்தில் கனமழைக்கு இதுவரை 9 பேர் உயிரிழந்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

1 More update

Next Story