7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 9 நாட்களில் தீர்ப்பு - 21 வயது இளைஞனுக்கு ஆயுள் தண்டனை


7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை; 9 நாட்களில் தீர்ப்பு - 21 வயது இளைஞனுக்கு ஆயுள் தண்டனை
x

7 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 21 வயது இளைஞனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

லக்னோ,

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டம் கைரனா பகுதியை சேர்ந்த இளைஞன் வாசில் (வயது 21). கடந்த மாதம் 1-ம் தேதி கைரனா பகுதியை சேர்ந்த 7 வயது சிறுவனிடம் மிட்டாய் வாங்கி தருவதாக கூறி சிறுவனை வாசில் மறைவான இடத்திற்கு அழைத்து சென்றுள்ளான்.

அங்கு 7 வயது சிறுவனுக்கு வாசில் பாலியல் தொல்லை கொடுத்துள்ளான். இது குறித்து யாரிடமும் கூறக்கூடாது என சிறுவனை வாஷில் மிரட்டியுள்ளான்.

ஆனால், அந்த சம்பவம் குறித்து சிறுவன் தன் பெற்றோரிடம் தெரிவித்துள்ளான். இதையடுத்து, வாசில் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. புகாரின் அடிப்படையின் வாசிலை போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை ஷாம்லி மாவட்டத்தில் உள்ள சிறப்பு கோர்ட்டில் கடந்த 21-ம் தேதி தொடங்கியது.

இந்நிலையில், இந்த வழக்கில் நேற்று தீர்ப்பு அளிக்கப்பட்டது. அதில், சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது உறுதியானதையடுத்து குற்றவாளி வாசிலுக்கு ஆயுள் தண்டனை விதித்து கோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்பித்தது. மேலும், குற்றவாளிக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.

இதையடுத்து, குற்றவாளி வாசில் சிறையில் அடைக்கப்பட்டான். விசாரணை தொடங்கிய 9 நாட்களில் குற்றவாளிக்கு தீர்ப்பு வழங்கிய கோர்ட்டு பல தரப்பில் பாராட்டை பெற்றுள்ளது.


Next Story