கோளாறில் சிக்கும் விமானங்கள்: பயணிகள் பாதுகாப்பை உறுதி செய்ய கம்யூனிஸ்ட் எம்.பி. கோரிக்கை
சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் எழுதி உள்ளார்.
புதுடெல்லி,
நமது நாட்டில் ஸ்பைஸ்ஜெட் விமானம், இண்டிகோ விமானம், விஸ்தாரா விமானம் தொழில்நுட்ப கோளாறுகளால் அவசரமாக தரையிறங்கிய சம்பவங்கள் கடந்த சில நாட்களாக அரங்கேறின. குறிப்பாக ஸ்பைஸ்ஜெட் விமானங்கள், 18 நாளில் 8 முறை தொழில்நுட்ப கோளாறில் சிக்கின.
இது தொடர்பாக கவலை தெரிவித்து சிவில் விமான போக்குவரத்து மந்திரி ஜோதிர் ஆதித்ய சிந்தியாவுக்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி. பினாய் விஸ்வம் கடிதம் எழுதி உள்ளார்.
அந்த கடிதத்தில் அவர், நாடு முழுவதும் பயணிகள் விமானங்கள் விரிவான மதிப்பாய்வு செய்யப்படுவதையும், பயணிகளின் பாதுகாப்பில சமரசம் செய்து கொள்ளப்படாது என்பதையும் உறுதி செய்யவேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.
Related Tags :
Next Story