டெல்லியில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம்


டெல்லியில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம்
x

Image Courtacy: ANI

டெல்லியில் கனடா பிரதமருக்கு எதிராக போராட்டம் நடத்தப்பட்டது.

புதுடெல்லி,

கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டியதை தொடர்ந்து, இருநாடுகளின் உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக ஐக்கிய இந்து முன்னணி அமைப்பினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அந்த அமைப்பின் தலைவர் ஜெய் பகவான் கோயல் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் ஏரளாமானோர் பங்கேற்றனர். அவர்கள் ஜஸ்டின் ட்ரூடோவுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

போராட்டம் குறித்து பேசிய ஜெய் பகவான் கோயல், "பல மாதங்களாக கனடா பிரதமர், இந்திய எதிர்ப்பு காலிஸ்தானிகளை வெளிப்படையாக ஆதரித்தும், பாதுகாத்தும் வருகிறார். இதற்கு இந்திய அரசு பலமுறை எதிர்ப்பு தெரிவித்தும் அவர் அதை பொருட்படுத்தவில்லை.

கனடா பிரதமருக்கு இந்திய எதிர்ப்பு காலிஸ்தானிகள் மீது அதிக அன்பு இருந்தால், அவர்களுக்கு கனடாவின் ஒரு பகுதியை கொடுத்து புதிய காலிஸ்தான் தேசத்தை உருவாக்கலாமே. அப்படி உருவாக்கினால் முதல் ஆளாக நாங்கள் அதை அங்கீகரிப்போம்" என கூறினார்.


Next Story