பெங்களூருவில் நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது


பெங்களூருவில் நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடக்கிறது
x

பெங்களூருவில் நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ளது.

பெங்களூரு:

நடிகர் சுதீப் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

கர்நாடகத்தில் கன்னட நடிகர்கள் பங்கேற்கும் கிரிக்கெட் போட்டி 'கர்நாடக சலனசித்ர கோப்பை' ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தது. கொரோனா பரவல் காரணமாக இந்த கிரிக்கெட் போட்டிகள் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் மீண்டும் கன்னட நடிகர்களின் கிரிக்கெட் போட்டி நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இந்த கிரிக்கெட் போட்டி பிப்ரவரி மாதம் 11, 12-ந் தேதிகளில் பெங்களூருவில் நடக்கிறது. இந்த போட்டியில் கன்னட நடிகர்கள் யார் வேண்டுமானாலும் கலந்து கொள்ளலாம். அவரவர்களின் நேரத்தை பொறுத்து சிலர் பங்கேற்பார்கள். நேரம் இல்லாதவர்கள் கலந்து கொள்ள மாட்டார்கள். இந்த போட்டியில் சர்வதேச வீரர்கள் 6 பேர் இடம் பெறுவார்கள். அது மட்டுமின்றி பிற மொழி நடிகர்கள், ஊடகத்தினரும் இடம் பெற வாய்ப்புள்ளது. சில நடிகர்கள் ஏன் வரவில்லை என்று நீங்கள் கேட்க வேண்டாம். கன்னட திரைத்துறை எனது சொத்து அல்ல.

இவ்வாறு சுதீப் கூறினார்.


Next Story