கையில் செருப்பு மாட்டிகொண்டு நூதன திருட்டில் ஈடுபடும் விசித்திர திருடர்கள்...!


கையில் செருப்பு மாட்டிகொண்டு நூதன திருட்டில் ஈடுபடும் விசித்திர திருடர்கள்...!
x
தினத்தந்தி 10 Dec 2022 7:17 PM IST (Updated: 10 Dec 2022 7:21 PM IST)
t-max-icont-min-icon

கையில் செருப்பு மாட்டிகொண்டு திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்த திருட்டு கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர்.

போபால்,

ஒவ்வொரு திருட்டு கும்பலும் ஒவ்வொரு முறையில் திருட்டை நடத்தும். அப்படி ஒரே விதமாக திருட்டை செய்யும் கும்பல் என்றேனும் ஒருநாள் காவல்துறை வசம் அகப்பட்டு விடும். அப்படி தான் மத்திய பிரதேசத்தில் ஒரு திருட்டு கும்பல் வசமாக சிக்கி உள்ளது

அதுவும் விசித்திரமான முறையில் திருடி மாட்டிக்கொண்டுள்ளனர். அதாவது , அவர்கள் திருட செல்கையில் காலில் செருப்பு போடுவதற்கு பதில், கையில் செருப்பு மாட்டிக்கொண்டு செல்வார்களாம். அதனால் நாய்கள் தொந்தரவு இருக்காது எனவும் போலீசாரிடம் மாட்டிக்கொள்ள மாட்டார்கள் என்ற நம்பிக்கை கொண்டுள்ளனர்.

இதே போல தொடர்ந்து திருட்டு சம்பவத்தில் ஈடுப்பட்டு வந்ததால், போலீசாரிடம் வசமாக சிக்கியுள்ளது இந்த திருட்டு கும்பல். அவர்களிடம் இருந்து சுமார் 1 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Next Story