கழுத்தை அறுத்து ஒடிசா பெண் கொலை


கழுத்தை அறுத்து   ஒடிசா பெண் கொலை
x

கழுத்தை அறுத்து ஒடிசா பெண் கொலை செய்யப்பட்டார்.

துமகூரு: துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா குரலசனயனபாளையா கிராமத்தில் செங்கல் சூளை செயல்பட்டு வருகிறது. இங்கு ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சகி (வயது 45) என்ற பெண், தனது சொந்த ஊர்காரர்கள் 4 பேருடன் தங்கியிருந்து வேலை பார்த்து வந்தார். அவர் கடந்த சில வாரத்திற்கு முன்பு தான் இங்கு வந்திருந்தார்.

இந்த நிலையில் எலக்கலவாடி பகுதியில் இன்று காலை சகி கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். அவர் எதற்காக கொல்லப்பட்டார்? கொலையாளிகள் யார் என்பது தெரியவில்லை. இதுகுறித்து குனிகல் போலீசார் வழக்குப்பதிவு செய்து, அவருடன் பணியாற்றிய ஒடிசாவை சேர்ந்த 4 பேரை பிடித்து விசாரணைநடத்தி வருகிறார்கள்.

1 More update

Next Story