'மாண்டஸ்' புயல்: ஆந்திராவில் களம் இறங்கிய தேசிய பேரிடர் மீட்பு குழு

கோப்புப்படம்
‘மாண்டஸ்’ புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் களம் இறங்கியுள்ளனர்.
அமராவதி,
வங்க கடலில் உருவான 'மாண்டஸ்' புயல் காரணமாக ஆந்திராவிலும் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆந்திராவின் தென் கடலோர மாவட்டங்களில் தேசிய பேரிடர் மீட்பு குழு மற்றும் மாநில பேரிடர் மீட்பு படை குவிக்கப்பட்டுள்ளன.
இதுகுறித்து மாநில பேரிடர் மேலாண்மை இயக்குனர் பி.ஆர்.அம்பேத்கர் கூறுகையில், "தற்போது, கனமழை இல்லை. புயல் காரணமாக கனமழை பெய்யும் என எதிர்பார்க்கப்படும் 6 மாவட்டங்களின் கலெக்டர்கள் எச்சரிக்கை செய்யப்பட்டு கட்டுப்பாட்டு அறைகளும் திறக்கப்பட்டுள்ளன. 5 தேசிய பேரிடர் மீட்பு குழுக்கள் மற்றும் 5 மாநில பேரிடர் குழுக்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. அவசர காலங்களில் மக்களை வெளியேற்றவும் தயாராக உள்ளோம்" என்றார்.
Related Tags :
Next Story






