வங்கக் கடலில் உருவானது 'ரீமால்' புயல்
'ரீமால்' புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவு கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது
புதுடெல்லி,
மத்திய வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேலும் இந்த புயலுக்கு 'ரீமால்' என பெயரிடப்பட்டுள்ளது.
'ரீமால்' புயல் தீவிர புயலாக வலுப்பெற்று நாளை நள்ளிரவு வங்காளதேச கேப்புப்பாராவிற்கும் மேற்குவங்காள சாகர் தீவிற்கும் இடையே கரையை கடக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் நேரம் தரைக்காற்று மணிக்கு 110-120 கி.மீ வேகத்திலும் இடை இடையே 135 கி.மீ வேகத்திலும் வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story