'சிட்ரங்' புயல் நாளை மறுநாள் காலை வங்காளதேசத்தை தாக்கும்: வானிலை மையம் தகவல்


சிட்ரங் புயல் நாளை மறுநாள் காலை வங்காளதேசத்தை தாக்கும்: வானிலை மையம் தகவல்
x

கோப்புப்படம் 

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

புதுடெல்லி,

வங்கக் கடலில் நிலைகொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை, சிட்ரங் புயலாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தாய்லாந்தால் சித்ராங் என்று பெயரிடப்பட்ட இந்த புயலானது, வங்கதேசத்தில் உள்ள டின்கோனா தீவுக்கும் சாண்ட்விப்க்கும் இடையே செவ்வாய்கிழமை காலை கரையை கடக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 5.30 நிலவரப்படி, மேற்கு வங்காளத்தில் உள்ள சாகர் தீவுக்கு தெற்கே 580 கிமீ தொலைவிலும், வங்காளதேசத்தின் பாரிசலில் இருந்து 740 கிமீ தெற்கே தென்மேற்கிலும் புயல் மையம் கொண்டிருந்தது.

இந்த புயலின் காரணமாக, ஒடிசா மற்றும் மேற்கு வங்கத்தின் சில பகுதிகளில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையக் தெரிவித்துள்ளது.


Next Story