மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பது பெருமை அளிக்கிறது; பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா பேச்சு


மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பது பெருமை அளிக்கிறது; பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா பேச்சு
x

மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பது பெருமை அளிக்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா கூறினார்.

மைசூரு:

மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பது பெருமை அளிக்கிறது என பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா கூறினார்.

தசரா விழா

உலகப்பிரசித்தி பெற்ற மைசூரு தசரா விழா ஆண்டுதோறும் விஜயதசமியையொட்டி கொண்டாப்படுகிறது. 10 நாட்கள் நடைெபறும் தசரா விழாவை காண வெளிமாநிலம், வெளிநாடுகளில் இருந்து லட்சக்கணக்கானோர் குவிவார்கள். இந்தநிலையில் இந்த ஆண்டு தசரா விழா அடுத்த மாதம் (அக்டோபர்) 15-ந் தேதி தொடங்கி 24-ந் தேதி வரை 10 நாட்கள் வரை நடக்கிறது.

இந்த ஆண்டு மைசூரு தசரா விழாவை பிரபல இசையமைப்பாளர் ஹம்சலேகா தொடங்கி வைப்பார் என முதல்-மந்திரி சித்தராமையா கூறினார். இந்தநிலையில் மைசூருவில் இசையமைப்பாளர் ஹம்சலேகா நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், மைசூரு தசரா விழாவை தொடங்கி வைப்பதற்கு என்னை தேர்வு செய்தது எனக்கு பெருமையாக உள்ளது.

கவிஞர் பட்டம்

ஆனால், நான் தசரா விழாவை தொடங்க தகுதி உள்ளவனா என என்னையே நான் கேட்டு கொள்கிறேன். என்னை இசையமைப்பாளர் கூறுவதில் நான் பெருமை அடைகிறேன். மேலும் சிலர் என்னை கவிஞர் கூறுகிறார்கள். எனக்கு கவிஞர் பட்டம் வேண்டாம் என ரசிகர்களை கேட்டு கொள்கிறேன்.

எல்லோருக்கும் சம உரிமை, சம நீதி கிடைக்க வேண்டும் என்பது தான் மன்னர் நால்வடி கிருஷ்ணராஜ உடையாரின் கனவு. நாட்டில் அரசியல் அமைப்பு சாசனம் வருவதற்கு முன்னதாகவே நால்வடி கிருஷ்ணராஜ உடையார் அவரது ஆட்சிக் காலத்தில் பிரஜா பிரதிநிதி சபை கூட்டத்தில் ஆட்சி மற்றும் வளர்ச்சி சம்பந்தமாக விவாதம் நடத்தினார்.

முதல்-மந்திரிக்கு நன்றி

இந்த கூட்டத்தில் அனைத்து சமுதாய மக்களும் கலந்து கொண்டனர். இப்படிப்பட்ட மைசூரு நகரத்தில் தசரா விழாவை தொடங்குவதற்கு என்னை தேர்ந்தெடுத்த முதல்-மந்திரி சித்தராமையா, மைசூரு மாவட்ட பொறுப்பு மந்திரி எச்.சி.மகாதேவப்பா மற்றும் மைசூரு மக்களுக்கு நன்றி.

இந்தி திணிப்பு இன்னும் இருந்து வருகிறது. இப்போதல்ல, பல ஆண்டுகளாக இது நடந்து வருகிறது. கர்நாடகத்தில் கன்னட மொழியை காப்பாற்றிக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டுள்ளது. கன்னட மக்கள் எல்லோரும் ஒற்றுமையாக சேர்ந்து கன்னட மொழியை காப்பாற்ற வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story