கேரளாவில் தந்தை விற்பனை செய்த லாட்டரியில் மகளுக்கு ரூ.75 லட்சம் பரிசு


கேரளாவில் தந்தை விற்பனை செய்த லாட்டரியில் மகளுக்கு ரூ.75 லட்சம் பரிசு
x

கேரளாவில் தந்தை விற்பனை செய்த லாட்டரியில் மகளுக்கு ரூ.75 லட்சம் பரிசு கிடைத்தது.

திருவனந்தபுரம்,

கேரளாவில் வாரத்தில் 7 நாட்களும் லாட்டரி சீட்டு குலுக்கல் நடத்தப்பட்டு வருகிறது. இவை தவிர ஓணம் பம்பர், விஷூ பம்பர், கிறிஸ்துமஸ் பம்பர் என அதிக தொகைக்கான பம்பர் லாட்டரி குலுக்கலும் நடத்தப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தந்தை விற்பனை செய்த லாட்டரி சீட்டில் மகளுக்கு முதல் பரிசு ரூ.75 லட்சம் கிடைத்த அதிசயம் நடந்துள்ளது. அதன் விவரம் வருமாறு:-

கேரள மாநிலம் அரூரை சேர்ந்தவர் என்.ஜே.ஆகஸ்டின். இவர் அந்த பகுதியில் கடந்த 10 ஆண்டுகளாக லாட்டரி கடை நடத்தி வருகிறார்.

இந்த நிலையில் நேற்று ஸ்ரீ சக்தி லாட்டரி குலுக்கல் நடைபெற்றது. இந்த குலுக்கலில் முதல் பரிசு ரூ.75 லட்சம் ஆகும். குலுக்கலில் முதல் பரிசு அகஸ்டின் கடையில் விற்ற சீட்டிற்கு கிடைத்த விவரம் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து அதிர்ஷ்டசாலியை தேடி வந்தனர்.

அப்போது அகஸ்டினின் மகள் ஆஸ்விக்கு விற்ற சீட்டிற்கு முதல் பரிசு ரூ.75 லட்சம் கிடைத்துள்ளது தெரிய வந்தது.

இதில் அகஸ்டினும் அவரது குடும்பத்தினரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

தந்தையின் லாட்டரி கடையில் வாங்கிய சீட்டுக்கு மகளுக்கு முதல் பரிசு கிடைத்தது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story