உப்பள்ளியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்


உப்பள்ளியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல்
x
தினத்தந்தி 24 July 2023 12:15 AM IST (Updated: 24 July 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

உப்பள்ளியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

உப்பள்ளி-

உப்பள்ளியில் போலீஸ்காரருக்கு கொலை மிரட்டல் விடுத்த கூலிப்படையினரை போலீசார் தேடி வருகின்றனர்.

கொலை மிரட்டல்

தார்வார் மாவட்டம் உப்பள்ளி டவுன் மண்டூரை அடுத்து பெண்டிகேரி போலீஸ் நிலையம் உள்ளது. இங்கு போலீஸ்காரராக பணியாற்றி வருபவர் வெங்கடேஷ். அதே போலீஸ் நிலையத்தில் கிரைம் பிரிவில் வேலை பார்த்து வருபவர் தேவ் பஜேந்திரி. இவர்கள் 2 பேருக்கும் வழக்கு ஒன்றை விசாரிப்பது தொடர்பாக கருத்துவேறுபாடு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்தனர்.

இந்தநிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு வெங்கடேசிற்கு செல்போன் அழைப்பு வந்தது. அதில் பேசிய மர்ம நபர்கள் வெங்கடேசை கொலை செய்துவிடுவதாக மிரட்டினர். இதனால் அதிர்ச்சி அடைந்த வெங்கடேஷ் இதுகுறித்து உப்பள்ளி-தார்வார் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபுவிடம் புகார் அளித்தார்.

கூலிப்படைக்கு வலை வீச்சு

அந்த புகாரின் பேரில் போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு, இதுகுறித்து விசாரணை நடத்தினார். அப்போது தேவ்பஜேந்திரிக்கும், வெங்கடேசிற்கும் இடையே கருத்துவேறுபாடு இருந்து வந்தது தெரியவந்தது. இதனால் தேவ் பஜேந்திரி, வெங்கடேசை மிரட்ட முயற்சித்தார். அதன்படி கூலிப்படையினரை வைத்து, வெங்கடேசை தேவ்பஜேந்திரி மிரட்டி இருப்பது தெரியவந்தது.

இதை உறுதி செய்த போலீஸ் சூப்பிரண்டு சந்தோஷ் பாபு, உடனே நவநகர் போலீசாரை அழைத்து விசாரணை நடத்தி அறிக்கை அளிக்கும்படி உத்தரவிட்டார். இதையடுத்து நவநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மேலும் போலீஸ்காரருக்கு மிரட்டல் விடுத்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story