மாவட்ட வாரியாக அலங்கார வண்டிகள் விவரம்


மைசூரு தசரா விழாவில் மாவட்ட வாரியாக வந்த அலங்கார வண்டிகள் தொடர்பான விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மைசூரு:

கொரோனா பரவல் காரணமாக 2 ஆண்டுகளுக்கு பிறகு மைசூரு தசரா ஊர்வலம் வழக்கமான கோலாகலத்துடன் நடைபெற்றது. இந்த ஊர்வலத்தில் மொத்தம் 47 அலங்கார ஊர்திகள் இடம்பெற்றன. இதில் மறைந்த நடிகர் புனித்ராஜ்குமார் படத்துடன் கூடிய அலங்கார ஊர்தி பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது. இந்த ஊர்தி சாம்ராஜ்நகர் மாவட்ட நிர்வாகம் சார்பில் வடிவமைக்கப்பட்டு இருந்தது.

இயற்கையின் மடியில் புலி மற்றும் யானை வன சரணாலயம் என்ற பெயரில் இந்த ஊர்தி வலம் வந்தது. ஹனூரை சேர்ந்த மகாதேவ் என்பவர் தலைமையில் 15 பேர் கொண்ட குழுவினர் வடிவமைத்த இந்த ஊர்தியின் முன்பகுதியில் புலிகள் சரணாலயத்தை விவரிக்கும் வகையில் புலி உருவமும், பின்பகுதியில் நடிகர் புனித்ராஜ்குமார் உருவமும் வடிவமைக்கப்பட்டு இருந்தது. நடிகர் புனித்ராஜ்குமார் கடந்த 2021-ம் ஆண்டு அக்டோபர் 29-ந்தேதி உயிரிழந்தது நினைவுகூரத்தக்கது.

பாகல்கோட்டை - முதோல் இன நாய்கள், இலகல் சேலை

பல்லாரி - துர்கம்மா தேவி கோவில்

பெலகாவி -ரேணுகாதேவி கோவில், கமலா கோவில்

பெங்களூரு புறநகர் - கபிலேஸ்வர் கோவில், ஜெயின் கோவில்

பெங்களூரு நகர் - கடலைக்காய்- பசவனகுடி கோவில்

பீதர் - பசவண்ணர் அனுபவ மண்டபம்

சாம்ராஜ்நகர் - மகாதேஸ்வரர் சிலை, நடிகர் புனித்ராஜ்குமார் சிலை

சிக்பள்ளாப்பூர் - பச்சை நந்தி, போகநந்தீஸ்வரர் கோவில்

சிக்கமகளூரு - சப்த நதிகளின் தவரு.

சித்ரதுர்கா - வாணிவிலாஸ் அணை, ஒனகே ஒபவவ்வா

தட்சிண கன்னடா - கம்பளா, புலிவேஷம்

தாவணகெரே - சாந்தபென்னூர் புஷ்கரனி

தார்வார் - சங்கீத இசை கச்சேரி

கதக் - ஓலாலம்மா தேவி, சத்ரபதி சிவாஜி சிலை

ஹாசன் - பேளூர், ஹலேபீடு, சரவணபெலகோலா

கோமதீஸ்வரர் கோவில்

ஹாவேரி - குருகோவிந்த ஷெட்டர், முக்தேஸ்வரர் தேவாலயம்

கலபுரகி - ராயல்கோட்டை, சிஞ்சோலி வனப்பகுதி

மண்டியா - மண்டியா கோவில்கள்

குடகு- பிரம்மகிரி மலை - பிரகண்டேஸ்வரர் கோவில்,

தலக்காவிரி தீர்த்த உற்சவம்,

மைசூரு - மைசூரு மாவட்ட சிறப்புகள்

கோலார் - வி.கே.எஸ்.அய்யங்கர் யோகாதான்,

அந்தரகங்கே பெட்டா

கொப்பல் - ஆனேகுந்தி மலை, கின்னாலா கோம்பே,

அஞ்சனாத்திரி மலை,

ராய்ச்சூர் - சிறு தானிய பயிர்கள்

ராமநகர் - ராமதேவரபெட்டா, ரனகத்து பக்‌ஷகாமா,

சிவமொக்கா - அக்கிமகாதேவி ஜென்மஸ்தலா

உடுப்பி - கைத்தறி சேலை நெசவு- பாரம்பரிய கலைகள்

உத்தரகன்னடா - கார்வார் கடற்படை

விஜயாப்புரா - சித்தராமேஸ்வரர் கோவில்

யாதகிரி - சூரப்புரா கோட்டை

விஜயநகர் - உக்கிர நரசிம்மர் கோவில், தரோஜி கரடி

சரணாலயம், கல்தேர்.

மேலும் திறன்மேம்பாடு மற்றும் தொழில் முனைவோர் துறை, பால் உற்பத்தியாளர்கள் மகா மண்டலி சார்பில் நந்தினி பால் பொருட்கள், மைசூரு பல்கலைக்கழகம் சார்பில் 106 ஆண்டு வரலாற்று ஊர்தி, காவிரி நீர்ப்பாசன கழகம் சார்பில் விவசாயிகள் மற்றும் பொதுமக்களுக்கான நன்மைகள், தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை திட்டங்கள், அகில இந்திய பேச்சு-செவிப்புலன் துறை சார்பில் கருணை மற்றும் அன்பை வெளிப்படுத்தும் ஊர்தி, கூட்டுறவுத் துறை, சுகாதாரத் துறை சார்பிலும் அலங்கர ஊர்திகள் இடம்பெற்றன. மண்டியா மாவட்ட நிர்வாகம் சார்பில் மகா கும்பமேளா, மகாதேவஸ்வரா ஜோதி, சுற்றுலா துறை சார்பில் சென்னகேசவா கோவில், பேளூர் கோவில், அரண்மனை மண்டபம், மைசூரு மாவட்டம் டி.நரசிப்புரா தாலுகா சோமநாதபுரா கோவில், ஆஜாதி கா அம்ருத மகா உற்சவ உள்பட 47 ஊர்திகள் வலம் வந்தன.


Next Story