குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க பிரத்யேக இணையதளம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்


குழந்தை தத்தெடுக்கும் நடைமுறையை எளிதாக்க பிரத்யேக இணையதளம் - மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி தகவல்
x

தத்தெடுக்கும் விதிமுறைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி குறிப்பிட்டார்.

புதுடெல்லி,

குழந்தைகளை சட்டப்பூர்வமாக தத்தெடுப்பதில் உள்ள சிரமங்கள், அதனைப் போக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் ஆகியவை குறித்து நாடாளுமன்ற மாநிலங்களவையில் தி.மு.க. எம்.பி. கனிமொழி சோமு கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதிலளித்த மத்திய மந்திரி ஸ்மிரிதி இரானி, குழந்தையை 5 ஆண்டுகள் பராமரித்து சான்று பெற்ற பிறகே தத்தெடுக்க முடியும் என்ற கால அளவு 2 ஆண்டுகளாக குறைக்கப்பட்டுள்ளது என தெரிவித்தார். தத்தெடுக்கும் பெற்றோர் பிற்காலத்தில் சந்திக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வகையிலும் விதிமுறைகள் மாற்றப்பட்டு சட்ட பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மேலும், குழந்தைகளை தத்தெடுக்கும் நடைமுறைகளை எளிதாக்க 'கேரிங்க்ஸ்'(CARINGS) என்ற பிரத்யேக இணையதளம் எல்லோரும் பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும், கால தாமதங்கள் தவிர்க்கப்படும் என்றும் ஸ்மிரிதி இரானி தெரிவித்துள்ளார்.



Next Story